சமீபத்தில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து முடிந்தது. துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தியதில் பாகிஸ்தான் அணி 869 கோடி வருவாய் இழப்பை சந்தித்ததாக தகவல் வெளியானது. Champions Trophy 2025 no Financial Loss
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி பிரிவு தலைவரான ஜாவேத் முர்டஷா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது,
‘சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக இந்திய ஊடகங்கள் செய்யும் தவறான பிரசாரத்தை அம்பலப்படுத்துவதே இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். இந்தப் போட்டியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் இழப்பைச் சந்தித்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே, பாகிஸ்தான் எதிரியான இந்திய ஊடகங்கள் வழக்கம்போல பொய்களை கட்டமைத்துள்ளது. அதை இன்று வேரறுப்போம். இந்திய ஊடகங்களை தொடர்ந்து, பாகிஸ்தான் ஊடகங்களிலும் அத்தகைய செய்தி வெளியானதுதான் பரிதாபமாக உள்ளது. ஆனால் , உண்மைகள் இதற்கு நேர்மாறாகவே இருக்கிறது.
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பி.சி.பிக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. செலவுகள் அனைத்தையும் ஐ.சி.சி. பார்த்துக் கொண்டது. முறையான ஆடிட்டிங் செய்த பிறகு, கிட்டத்தட்ட 92 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. Champions Trophy 2025 no Financial Loss
பி.சி.சி.ஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாததால், எங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு நாங்களும் எங்கள் அணியை அனுப்பப் போவதில்லை. அந்த போட்டி கொழும்புவில் நடக்கும். அப்போது, பி.சி.சி.ஐ தான் கடும் நஷ்டத்தை சந்திக்கும்.’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.