திட்டமிட்டபடி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி… இந்திய அணி செல்லுமா?

Published On:

| By Kumaresan M

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள்  மத்திய அரசு அனைத்து விதமான விளையாட்டு தொடர்பான உறவுகளையும் பாகிஸ்தானுடன்  முறித்து கொண்டது. ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த முயற்சிப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி தலைமை நிர்வாகி அலர்டைஸ் பேசுகையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில்தான் திட்டமிட்டப்படி நடைபெறும். இந்திய அணியை பங்கேற்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தீர்வை கண்டறிய சில முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை பங்கேற்க வைக்கும் முடிவை மத்திய அரசுதான் எடுக்கும்.  இதனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தான் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது . சில கிரிக்கெட் விமர்சகர்கள், பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட மட்டுமே இந்திய வீரர்களை அனுப்பலாம் என்றும், அம்ரிஸ்தரஸ் நகரில்  இந்திய வீரர்களை தங்க வைத்து கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட்கீப்பர் மொயின்கான், இந்திய முன்னாள் வீரர்கள் பிசிசிஐ – யிடத்தில் பேசி பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்கவில்லை என்றால், வருங்காலத்தில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணி செல்ல கூடாது என்கிற முடிவை எடுக்க வேண்டுமென்றும் மொயின் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

சீதாராம் யெச்சூரி காலமானார்

“இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்… ஆனால் : மீண்டும் பேசுபொருளான துரைமுருகனின் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share