அதிருப்தியில் அமித்ஷா … நடிகர் சுரேஷ் கோபியின் அமைச்சர் பதவி பறிப்பு?

Published On:

| By Kumaresan M

சினிமாவில் நடிக்க அமித்ஷா அனுமதியளிக்காத நிலையில், நடிகர் சுரேஷ் கோபி படங்களில் நடிக்கப் போவதாக உறுதியாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியான நடிகர் சுரேஷ் கோபி தனி பொறுப்புடன் கூட மத்திய அமைச்சராக உள்ளார். சமீபத்தில், அவருக்கு கேரள பிலிம் சேம்பரில்   பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய , நடிகர் சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிப்பதற்காக மத்திய அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசியதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடத்தில் தான் 22 படங்களில் நடித்து கொண்டிருப்பதாக தெரிவித்தேன். அதனால், தனக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன்.

அனுமதி கிடைத்தால்,  செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ள ஒத்தக் கொம்பன் படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.மேலும், அமைச்சராக இருப்பதால் தன்னுடன் எப்போதும் 4 மத்திய அரசு அதிகாரிகள் இருப்பார்கள்.

ADVERTISEMENT

படத் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, தனி கேரவன் தர வேண்டும். அப்போதுதான் எனது அமைச்சரவை பணிகள் பாதிக்காமல் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், படங்களில் நடிக்க முடியாமல் போனால் தன்னால் வாழவே முடியாது என்றும் சினிமா வாழ்க்கைக்காக அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருப்பதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

சுரேஷ்கோபியின் பேச்சு பாஜக கட்சி தலைமைக்கு தலைவலியாக இருந்து வருகிறது. மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் பிற பணம் ஈட்டும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று விதி இருப்பதாகவும் சுரேஷ் கோபிக்கு விதிவிலக்கு அளித்தால் மற்றவர்களும் அதே போல கேட்பார்கள் என்று பாஜக தலைமை கருதுகிறது. எனவே, விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

வாழை, கொட்டுக்காளி…இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் படங்கள்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா கே.எல்.ராகுல்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share