ADVERTISEMENT

ஒரே நதிநீர் இணைப்பைக் கொண்டு வராதது ஏன்? – கி.வீரமணி

Published On:

| By Selvam

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு சட்டத்தை கொண்டு வரலாம் என கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி டெல்டாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்ட விவசாயிகளின் கண்ணீர் வற்றாத கண்ணீராக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு பயிர்களுக்கு போதிய காவிரி  தண்ணீர் வரத்து இல்லாததே காரணம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மிகவும் சிக்கலான இந்த பிரச்சினையில் அண்டை மாநிலத்துடன் எப்போதும் நல்லுறவு பேணுவதே மக்கள் நல பாதுகாப்புக்குரியதாக அரசியல் அமையும் என்ற அடிப்படையில் மிக எச்சரிக்கையுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார்.

நாட்டின் நதிகள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டி வாஜ்பாய் காலத்தில் இருந்து கூறியதில், ஏன் இந்த 9 ஆண்டு கால மோடி அரசு எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை? ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை விட ஒரே நதிநீர் இணைப்பு ஏற்பட்டிருந்தால் வெள்ளம், வறட்சி என இரண்டு கொடுமைகளில் இருந்தும் நம் நாட்டு மக்கள் அனைத்து மாநிலத்தவரும் காப்பாற்றப்பட்டு மகிழ்ச்சி வாழ்வு வாழ்வார்கள்.

ADVERTISEMENT

இதை செய்ய தவறிய ஆட்சியை மாற்றி  புதியதோர் வரலாறு படைக்க நாட்டு மக்கள் ஆயத்தமாகிட அரிய தருணம் நெருங்குகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

ராஜ்

ADVERTISEMENT

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ODI Worldcup 2023: 8வது வெற்றி…பாகிஸ்தான் அணி புதிய வரலாறு!

சாதியச் சமூக ஒழுங்கை உடைக்க அம்பேத்கர் கண்ட வழி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share