மீனவர்களுக்கான திட்டங்கள் என்னென்ன? – திருமா கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

Published On:

| By Selvam

மீன்வளத்துறை அமைச்சகம் ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா’ என்னும் திட்டத்தின் மூலம் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொண்டு வருவதாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் லாலன் சிங் தெரிவித்துள்ளார். Central Fisheries Minister replies

விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், “பேரிடர் பெருந்துயரின் போது மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், நடவடிக்கைகள் அரசிடம் உள்ளதா?” என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.

அதற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் லாலன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில் “மீன்வளத் துறை, ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா’ என்னும் முதன்மையான திட்டத்தை மீன்வளத் துறை மற்றும் இந்திய மீனவர்களின் நலனுக்காக நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சி மூலம் நீலப் புரட்சியைக் கொண்டுவருவதற்காக செயல்படுத்தி வருகிறது.

ரூ.20,050 கோடி முதலீட்டில் இத்திட்டத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கான நலன் சார்ந்த நடவடிக்கைகளை இத்திட்டம் கொண்டிருக்கிறது.

தேசிய கப்பல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் ரூ.364.00 கோடி செலவில் PMMSY திட்டத்தின்படி 1,00,000 மீன்பிடி கப்பல்களில் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவியுள்ளது.

படகு உரிமையாளர்களுக்கு அவரசகாலத்தில் இரு வழி தொடர்பு கொண்ட குறுஞ்செய்தி அனுப்புவதற்கு டிரான்ஸ்பாண்டருக்கான உதவி இலவசமாக வழங்கப்படுகிறது.

மீனவர்கள் கடல் எல்லையை நெருங்கினாலோ அல்லது தாண்டினாலோ இது எச்சரிக்கை அளிக்கும். கூடுதலாக, (i) கடலோர மீனவர்களின் பொருளாதாரத்தையும் சமூக நலன்களையும் அதிகப்படுத்திடவும் நிலையான மீன்பிடி நடைமுறைகள் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைத்திடும் நோக்கத்திலும் கடல்சார் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒருங்கிணைந்த கடலோர மீன்பிடி கிராமங்களின் வளர்ச்சியை மேற்கொண்டுவருகிறது.

ii) 18 முதல் 70 வயதுள்ள மீனவர்களுக்கு விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஆகியவற்றுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு, விபத்தில் பகுதி ஊனத்திற்கு ரூ.2.50 லட்சம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 25,000 காப்பீடு வழங்கப்படுகிறது” என மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் லாலன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். Central Fisheries Minister replies

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share