“பேங்க் வேலை கனவா? ஆனா சாதா கிளர்க் வேலை வேண்டாம், கெத்தா ஆபீசர் வேலைதான் வேணும்னு காத்துக்கிட்டு இருக்கீங்களா?” உங்களுக்கான ஒரு சூப்பர் வாய்ப்பு இதோ! இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India), 2026-ம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 350 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (SO) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. “டிகிரி முடிச்சுட்டு, குறிப்பா எம்பிஏ (MBA) படிச்சுட்டு வேலை தேடுறவங்களுக்கு இது ஒரு கோல்டன் சான்ஸ்!”
காலியிடங்கள் என்னென்ன? மொத்தமுள்ள 350 இடங்கள் இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
- மார்க்கெட்டிங் ஆபீசர் (Scale I): 300 இடங்கள். (அதிக இடங்கள் இதில்தான்! மார்க்கெட்டிங் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது செம வாய்ப்பு).
- ஃபாரக்ஸ் ஆபீசர் (Foreign Exchange Officer – Scale III): 50 இடங்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கல்வித் தகுதி:
- மார்க்கெட்டிங் ஆபீசர்: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் (Degree), இரண்டு வருட எம்பிஏ (MBA Marketing) அல்லது அதற்கு இணையான படிப்பை (PGDM) முடித்திருக்க வேண்டும்.
- ஃபாரக்ஸ் ஆபீசர்: பட்டப்படிப்புடன், IIBF நடத்தும் சான்றிதழ் படிப்பு மற்றும் வங்கித் துறையில் 5 வருட முன் அனுபவம் தேவை.
வயது வரம்பு:
- மார்க்கெட்டிங் ஆபீசருக்கு 22 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- ஃபாரக்ஸ் ஆபீசருக்கு 25 முதல் 35 வயது வரை. (இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு).
சம்பளம் எவ்வளவு? “ஆபீசர் வேலைன்னா சும்மாவா?” தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு, வங்கி விதிகளின்படி கைநிறையச் சம்பளம் கிடைக்கும்.
- Scale I (Marketing): அடிப்படைச் சம்பளம் ரூ.48,000-ல் தொடங்கி, அலவன்ஸ் எல்லாம் சேர்த்து மாதம் ரூ.70,000-க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது.
- Scale III (Forex): இதைவிட அதிக சம்பளம் (ரூ.1 லட்சத்தை நெருங்கும்).
தேர்வு முறை:
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு (பிப்ரவரி/மார்ச் 2026-ல் நடைபெறலாம்).
- நேர்காணல் (Interview).
விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: பிப்ரவரி 3, 2026.
சாதாரணமா ஐபிபிஎஸ் பிஓ (IBPS PO) எக்ஸாம் எழுதினா, லட்சக்கணக்கில் போட்டி இருக்கும். ஆனா, இது ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்’ வேலை. எம்பிஏ மார்க்கெட்டிங் படிச்சவங்க மட்டும்தான் போட்டியில இருப்பாங்க. அதனால கூட்டம் குறைவு, வேலை ஈஸியா கிடைக்கும். சப்ஜெக்ட் நாலேட்ஜ் கொஞ்சம் இருந்தா போதும்… பேங்க் மேனேஜர் ஆகிடலாம் பாஸ்!
