பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி!

Published On:

| By Monisha

bavatharini ilaiyaraja death

மறைந்த பின்னணி பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி நேற்று (ஜனவரி 25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கையில் இருந்து பவதாரிணியின் உடல் மாலை 3.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. விமான நிலையத்தில் இருந்து தி.நகர் முருகேசன் சாலையில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இளையராஜா வீடு இருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பவதாரிணி உடலுக்கு விஜய்யின் தாய் சோபா சந்திரசேகர், இயக்குநர் சுதா கொங்கரா, சிவகுமார், வெற்றிமாறன், ராமராஜன், விஷால், கார்த்தி, நடிகர் பிரேம்ஜி, பாடகர் மனோ, இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் பவதாரிணி மறைவு வேதனை அளிப்பதாகவும் இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று இரவு 10 மணிக்கு இளையராஜாவின் சொந்த ஊரான தேனியில் உள்ள பண்ணைபுரத்திற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு பவதாரிணி உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

விடாமுயற்சி: ரசிகருக்கு ‘ஸ்வீட்’ சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்

சரண்டரான திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள்: அழுத்தம் கொடுத்த கட்சித் தலைமை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share