ADVERTISEMENT

கொண்டாட்டமா? மன அழுத்தமா? – ‘December Anxiety’ இருந்து தப்பிப்பது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

How to escape December anxiety mental health

இதோ… 2025-ம் ஆண்டின் கடைசிப் பக்கத்துக்கு வந்துவிட்டோம். இன்று (டிசம்பர் 1) பிறந்துள்ள இந்த மாதம், சிலருக்குக் கொண்டாட்டத்தின் ஆரம்பம். எங்கு பார்த்தாலும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கேக் வாசனை, “ஹேப்பி நியூ இயர்” வைப்ரேஷன். ஆனால், எல்லோருக்கும் இதே மனநிலை இருப்பதில்லை.

ADVERTISEMENT

பலருடைய மனதிற்குள் ஒரு இனம் புரியாத பாரம், சோர்வு மற்றும் நடுக்கம். “வருஷம் முடியப்போகுதே…” என்ற பதற்றம். கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க, மன அழுத்தம் மறுபக்கம் கழுத்தை நெரிக்கும். இதைத்தான் உளவியலில் ‘December Anxiety’ அல்லது ‘Holiday Blues’ என்கிறார்கள்.

ADVERTISEMENT

ஏன் இந்த அழுத்தம் வருகிறது?

சாதிக்காத இலக்குகள் (Unmet Goals):

ADVERTISEMENT

“ஜனவரி 1-ம் தேதி ஜிம்முக்கு போவேன், நிறைய சேமிப்பேன், புது மொழி கற்பேன்…” என்று எடுத்த சபதங்கள் எல்லாம் என்னாச்சு? பல சபதங்கள் பிப்ரவரியிலேயே காலாவதியாகி இருக்கும். இப்போது காலண்டர் முடியும்போது, “இந்த வருஷமும் சும்மாவே போயிடுச்சே” என்ற குற்றவுணர்ச்சி (Guilt) பலரைத் தூங்க விடுவதில்லை.

பணம் பத்தும் செய்யும் (Financial Stress):

ADVERTISEMENT

டிசம்பர் மாதம் என்றாலே செலவுகளின் மாதம். கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை, நியூ இயர் பார்ட்டி, ஊருக்குச் செல்ல டிக்கெட் புக்கிங், அடுத்து வரும் பொங்கல் செலவு என வரிசையாகப் பர்ஸைக் காலி செய்யக் காத்திருக்கின்றன. “சம்பளம் எதற்கும் பத்தாதோ?” என்ற பயம் டிசம்பர் பதற்றத்தை அதிகரிக்கும்.

பருவநிலை மாற்றம் (Weather Gloom):

நம்ம ஊரைப் பொறுத்தவரை டிசம்பர் என்பது மழைக்காலம். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதாலும், சூரிய வெளிச்சம் குறைவதாலும் நம் மூளையில் ‘செரோடோனின்’ சுரப்பு குறையும். இது இயல்பாகவே ஒரு சோகமான மனநிலையை (Seasonal Blues) உருவாக்கும். இதனுடன் சென்னைவாசிகளுக்கு ‘மழை வெள்ளம் வருமா?’ என்ற பழைய பயமும் சேர்ந்துகொள்கிறது.

இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்:

கடந்த 11 மாதங்களில் செய்ய முடியாத விஷயத்தை, இந்த கடைசி 30 நாட்களில் அவசர அவசரமாகச் செய்து முடிக்க முடியாது. ரிலாக்ஸ். முடிந்தது முடிந்ததுதான். சாதிக்காத இலக்குகளை நினைத்து வருந்தாமல், கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்துத் திருப்தி கொள்ளுங்கள்.

‘JOMO’ மனநிலை (Joy of Missing Out):

எல்லோரும் பார்ட்டிக்கு போகிறார்கள், எல்லோரும் ட்ரிப் போகிறார்கள் என்று நாமும் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்குப் பிடிக்காத இடங்களுக்குத் துணிச்சலாக “நோ” சொல்லுங்கள். மழை பெய்யும்போது, வீட்டில் போர்வையைப் போர்த்திக்கொண்டு பிடித்த படத்தைப் பார்ப்பது கூட ஒரு வகை கொண்டாட்டம் தான்.

சோஷியல் மீடியா டிடாக்ஸ் (Detox):

அடுத்தவர்கள் ஸ்டேட்டஸைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதை முதலில் நிறுத்துங்கள். இன்ஸ்டாகிராமில் அவர்கள் காட்டுவது “ஹைலைட்ஸ்” (Highlights) மட்டும் தான்; முழு வாழ்க்கை அல்ல.

மொத்தத்தில்… டிசம்பர் மாதம் என்பது ஓட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்று (Final Lap) அல்ல; அது ஓய்வெடுப்பதற்கான நேரம். 2026-ஐ ஃப்ரெஷ்ஷாகத் தொடங்க, இப்போது மனதிற்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க பாஸ்!.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share