“மலையேற முதலில் மலை வேண்டும்”- இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

Published On:

| By Kalai

லவ் டுடே படத்தின் 100 வது நாள் கொண்டாட்ட விழா சென்னையில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. Celebrating 100 days of Love Today

லவ் டுடே படத்தின் 100 வது நாள் கொண்டாட்ட விழா சென்னையில்  நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

‘லவ் டுடே’ படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.

இதில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன், நடிகை இவானா, இசையமைப்பாளர் யுவன் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக  நகைச்சுவை நடிகர் சதீஷ்,இயக்குனர் மோகன் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில்,

இன்றைய இளைஞர்களுக்கு பிரதீப் inspiring ஆக உள்ளார். AGS உருவான 17 வருடத்தில் 16 வருடத்துக்கு மேல் அந்நிறுவனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி. தனிஒருவன் படத்தின் மூலம் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.

நடிகை இவானா பேசுகையில்,

இந்தப்படத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை வேறுமாதிரி செல்கிறது. பிரதீப் ரங்கநாதனை இயக்குநராகவும் நடிகராகவும் நண்பராகவும் பிடிக்கும். பிரதீப் ரங்கநாதன் என்றாலே சிறப்புதான். சத்யராஜ் சாருடன் நடிப்பதில் சிறு தயக்கம் இருந்தது. ஆனால் நிறைய கற்றுக்கொடுத்தார். படக்குழுவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

AGS அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில்,

கடைசியாக பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசியது. எனது வாழ்க்கையில் கீழே சென்ற போது ஒரு வெற்றி கொடுத்த படம் லவ் டுடே. பிரதீப் கதை கூறிய பின் பெரிய ஓபனிங் கிடைக்கும் என நம்பினோம்.

ஒவ்வொரு படத்தை தயாரிக்கும் போதும் ஹிட் கொடுக்க வேண்டும் என நினைப்போம். அதில் இந்த படம்‌ முதலிடத்தில் இருக்கும் போது மிக்க மகிழ்ச்சி என்றார்.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பேசுகையில்,

மலை ஏறுவதற்கு என்ன வேண்டும் என்பதை தாண்டி முதலில் மலை வேண்டும். அந்த மலை தான் லவ் டுடே.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்வில் ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள் என்றால். நீங்கள் பெரிய மலை ஏறி கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் நன்றி தெரிவிக்கத்தான் இந்த நிகழ்ச்சி. ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது எளிதல்ல. அதை செய்ததை நான் எப்போதும் மறக்க மாட்டேன்.  ரூ.100 கோடியை உலகம் முழுவதும் இந்த படம் தாண்டி உள்ளது  என்றார்.

கலை.ரா

வீழ்ச்சியில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடங்கியது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share