போர் நிறுத்த அறிவிப்பை மீறி ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் பல்வேறு ராணுவ நிலைகள், பொதுமக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ராணுவ வீரர் வீரமரணம்
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி தரப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் நிறுத்தத்தை மதிக்காமல் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் இம்தேயாஸ் வீர மரணம் அடைந்தார். பொதுமக்களில் பலர் படுகாயமடைந்தனர்.
மேலும் 3 வீரர்கள் வீரமரணம்
முன்னதாக நேற்று காலை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இமாச்சலப் பிரதேச ராணுவ வீரர் பவண் குமார் வீர மரணம் அடைந்தார். மற்றொரு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்ற ராணுவ வீரர் சுனில் குமார், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். உதம்பூர் தாக்குதலில் சுரேந்திர குமார் மோகா என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
