41 பேர் பலியான கரூர் வழக்கு: விஜய் நாளை மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

CBI summons Vijay to appear

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை டெல்லி அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தற்போது சிபிஐ (CBI) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். மேலும், த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மீண்டும் சம்மன்

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை (மார்ச் 10) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

சிபிஐ சம்மன் தொடர்பாக வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். ”சிபிஐயிடம் நேரில் ஆஜராவதற்கு அவகாசம் கேட்கலாமா?” எனவும் விஜய் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

CBI summons Vijay to appear
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share