அனில் அம்பாணி வீட்டில் சிபிஐ ரெய்டு!

Published On:

| By Kavi

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருகிறது.

வங்கி கடனை திருப்பிச் செலுத்தாததால் அனில் அம்பானியை ‘திவாலானவர்’ என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருந்தது. அனில் அம்பானி சுமார் 2000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக எஸ்.பி.ஐ குற்றம்சாட்டியது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து அமலாக்கத் துறை விசாரணைக்கும் அனில் அம்பானி ஆஜரானார்.

ADVERTISEMENT

அமலாக்கத் துறையை தொடர்ந்து அனில் அம்பாணி மீது சிபிஐயும் வழக்குப்பதிவு செய்தது.

இன்று (ஆகஸ்ட் 23) அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

“மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அனில் அம்பாணி தொடர்புடைய ஆறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வங்கி நிதி எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் கடன்கள் திருப்பி விடப்பட்டதா என்பதை கண்டுபிடிப்பதற்கு முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிப்பதே இன்றைய சோதனையின் நோக்கமாக இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

மும்பையில் உள்ள வீட்டில் இன்று (ஆகஸ்ட் 23) காலை முதல் 8அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அனில் அம்பானியும் அவரது குடும்பத்தினர் அங்குள்ளதாக தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share