நியூஸ்க்ளிக் செய்தி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ இன்று (அக்டோபர் 11) சோதனை நடத்தி வருகிறது.
சீனாவிடம் இருந்து அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங் மூலம் பணம் பெற்றதாக நியூஸ்க்ளிக் ஊடக நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி டெல்லி காவல்துறை சோதனை நடத்தியது.
டெல்லியில் உள்ள நியூஸ்க்ளிக் நிறுவனத்துக்குச் சீல் வைக்கப்பட்டது. இதன் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீசார் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நியூஸ் க்ளிக்கின் மனித வளத் தலைவர் அமித் சக்ரவர்த்தியும் கைது செய்யப்பட்டார்.
இருவருக்கும் டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஹர்தீப் கவுர், 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நேற்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 11) நியூஸ்க்ளிக் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
The CBI is currently conducting search and seizure operations at the NewsClick office and the residence of our Editor-in-Chief Prabir Purkayastha. This is the fifth agency that is investigating us. We are cooperating with the authorities.#NewsClickRaids #NewsClick…
— NewsClick (@newsclickin) October 11, 2023
வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவு, பிரபிர் புர்கயஸ்தா வீடு மற்றும் நியூஸ்க்ளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகிறது.
பிரபிர் புர்கயஸ்தா கூட்டாளியும் எழுத்தாளருமான கீதா ஹரிஹரன் வீட்டிலும் மதியம் 1 மணி வரை சோதனை நடைபெற்றது.
ஏற்கனவே டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு, டெல்லி போலீஸ் பொருளாதார குற்றப்பிரிவு, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை நியூஸ்க்ளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தியிருக்கின்றன.
இந்நிலையில் சிபிஐயும் சோதனை நடத்துகிறது. எங்கள் நிறுவனத்தில் சோதனை நடத்தும் ஐந்தாவது விசாரணை அமைப்பு சிபிஐ என்று நியூஸ்க்ளிக் தெரிவித்துள்ளது.
அதேசமயம் சீனாவிடம் இருந்து நாங்கள் எந்த பணத்தையும் பெறவில்லை என்று நீதிமன்றத்தில் நியூஸ்க்ளிக் நிறுவனம் கூறியுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு: ED -க்கு அவகாசம் தந்த உயர்நீதிமன்றம்
