அவசரப்படாதீங்க… வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

CBDT extends date of filing

வருமானவரி தாக்கலுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. CBDT extends date of filing

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான E Filing PORTAL இன்னும் திறக்கப்படவில்லை. கடந்தாண்டு ஏப்ரல் 16ஆம் தேதியே போர்டல் திறக்கப்பட்டது. இந்தாண்டு மே 27ஆம் தேதி ஆகியும் திறக்காததால் லட்சக்கணக்கானோர் குழப்பம் அடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

இதற்கு காரணம்  E Filing PORTAL  போர்ட்டலில்  உள்ள வருமான வரி கணக்கு படிவத்தில் மாற்றம் செய்யப்படுவதால் தாமதமாகிறது என கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக இன்று (மே 27) நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,  “ஐடிஆர்-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான மாற்றங்களைக் கருத்தில் கொண்டும்,  அனைவரும் சுமூகமான முறையில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும்  என்பதாலும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

வருமான வரி படிவங்கள், அமைப்பு மேம்பாட்டுத் தேவைகள் மற்றும் டிடிஎஸ் கிரெடிட் பிரதிபலிப்புகளில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான காலக்கெடு செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  CBDT extends date of filing

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share