காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
பென்னாகரம், இண்டூர், நல்லம்பள்ளி, இலக்கியப்பட்டி, தர்மபுரி உள்ளிட்ட பல ஊர்களில் நடைபயணம் செய்யும் இவர், உபரிநீர் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “காவிரி உபரி நீர் கடலில் வீணாகக் கலக்கிறது.
உபரி நீரிலிருந்து மூன்று டிஎம்சி நீரை நீரேற்று நிலையம் மூலமாக எடுத்துச் சென்று தர்மபுரி மாவட்டத்தில், உள்ள அனைத்து ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்.
இன்று கிட்டத்தட்ட, தர்மபுரி மாவட்டத்தில் 1000 அடி வரையில் நிலத்தடி நீர் உள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 50 அடி ஆழத்திற்கு வந்துவிடும்.
35 நாட்களாக காவிரியில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு, 161 டி.எம்.சி. இந்த ஆண்டுக்குள் காவிரியில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு 200 டி.எம்.சி க்கு மேல் இருக்கும்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிடம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினேன்.
நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி, அவர் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்றார்.
செல்வம்
