கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் பொக்கே டிஷ்!

Published On:

| By Kavi

துண்டு துண்டாக பரிமாறப்படும் சிக்கன் 65-ஐவிட முழுதாக பரிமாறப்படும் தந்தூரி சிக்கனுக்கு தனி மவுசு உண்டு. அப்படிப்பட்டதுதான் இந்த காலிஃப்ளவர் பொக்கே டிஷ். கோபி 65 செய்து பரிமாறுவதைவிட இந்த வீக் எண்ட் ஸ்பெஷலாக இதைச் செய்து அசத்தலாம். வீக் எண்டை கொண்டாடலாம்.

என்ன தேவை? Cauliflower Bokeh Dish

ADVERTISEMENT

அடர்த்தியான, அரை கிலோ எடையுள்ள, வெண்மையான காலிஃப்ளவர் – ஒன்று

தக்காளி – 2

ADVERTISEMENT

வெள்ளை மிளகுத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு ஸ்பூன் 

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – 3

வெங்காயம் – ஒன்று

இஞ்சி – சிறிதளவு

சீரகம் – ஒரு டீஸ்பூன் 

தேங்காய்த்துருவல் – அரை கப் 

முந்திரிப்பருப்பு – 10

எலுமிச்சம்பழம் – ஒன்று 

நெய் – 4 டீஸ்பூன்

கெட்டித் தயிர் – 4 கப் 

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு 

உப்பு – தேவையான அளவு

வாழை இலை – ஒன்று.

எப்படிச் செய்வது? Cauliflower Bokeh Dish

காலிஃப்ளவரின் அடியில் உள்ள தண்டு, இலையை அகற்றிவிட்டு முழு பூவாக, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கவிழ்த்து வைக்கவும் (பூ பாகம் தண்ணீரில் அமிழ்ந்து இருக்க வேண்டும்). 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, அதன் மேல் சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு தடவி 10 நிமிடங்கள் ஊறவிடவும். பூவை அப்படியே எடுத்து ஆவியில் வேகவைக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நைஸாக அரைக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை சிறிய துண்டுகளாக்கி வறுத்து எடுக்கவும்., அதே வாணலியில், அரைத்த விழுதைப் போட்டு… மிளகுத்தூள், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஈரம் வற்றும் வரை கிளறவும். இந்தக் கலவை ஆறியவுடன், ஒரு தட்டில் வாழை இலையை அளவாக ‘கட்’ செய்து போட்டு அதன் மேல் காலிஃப்ளவரைக் கவிழ்த்து வைத்து, மசாலா கலவையை ஸ்பூனில் சிறிது சிறிதாக எடுத்து இடைவெளிகளில் அடைக்கவும்.

காலிஃப்ளவரை சுற்றி கொத்தமல்லி, தேங்காய் துருவலை போட்டு அலங்கரிக்கவும். சாப்பிடும் சமயம் சாஸரில் தயிருடன் முந்திரி கலந்து, அதில் காலிஃபிளவரை தேவையான அளவு துண்டுகளாக செய்து போட்டு பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share