ADVERTISEMENT

இரண்டு கட்டங்களாக சாதிவாரி கணக்கெடுப்பு : எப்போது துவங்கும்?

Published On:

| By Kavi

caste-wise census to be conducted in two phases

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. caste-wise census to be conducted in two phases

பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்தநிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தொடங்கவும், ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தமாக இரண்டு கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (ஜூன் 4) உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,

“மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும்.

ADVERTISEMENT

லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும்.

மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. 

முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. caste-wise census to be conducted in two phases

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share