கர்நாடகாவில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்!

Published On:

| By Mathi

Karnataka Caste-Based Census

கர்நாடகா மாநிலம் முழுவதும் சமூக பொருளாதார அடிப்படையிலான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது.

நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. அதேநேரத்தில் கர்நாடகா அரசு, சமூக- பொருளாதார அடிப்படையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் என அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

கர்நாடகாவில் 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதும் சித்தராமையாதான் முதல்வராக இருந்தார். ஆனால் அந்த கணக்கெடுப்பின் அறிக்கைக்கு அனைத்து ஜாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து கர்நாடகாவில் புதியதாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இந்த கணக்கெடுப்பு நேற்று ஆகஸ்ட் 23-ந் தேதி தொடங்கியது.

ADVERTISEMENT

இக்கணக்கெடுப்பு அடுத்த 90 நாட்களுக்கு முடிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share