தமிழக – கேரளா எல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடமிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

By Pandeeswari Gurusamy

|

Published on 28 Nov 2025, 10:34 AM

Cash seized from a two-wheeler rider on the Tamil Nadu-Kerala border

தமிழக கேரள எல்லையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக நகை, பணம் திருட்டு, ஹவாலா பண பரிமாற்றம் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (நவம்பர் 28) கோவையை அடுத்த தமிழக கேரளா எல்லையான வேலந்தாவளம் காவல் துறை சோதனைச் சாவடியில், தமிழக போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோவையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்தி நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்தை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

விசாரணையில் பணம் எடுத்து வந்தவர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வானியம்குளம் பகுதியை சேர்ந்த சுதீர் என்பதும், அவர் வந்த இருசக்கர வாகனத்தில் ரூ.40 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.

ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட பணத்தை வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் கந்தே கவுண்டன் சாவடி போலிசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ADVERTISEMENT

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கேரள மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியில் உள்ள ஷோபனா ஜுவல்லரி என்ற நகை கடையிலிருந்து பழைய தங்கத்தை கோவை பி.கே சாலை பகுதிக்கு கொண்டுவந்து விற்பனை செய்து விட்டு பணமாக கேரளா கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலாந்தவளம் சோதனை சாவடியில் கந்தேகவுண்டன் சாவடி போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த பணத்திற்கான உரிய ஆவணங்களைஇல்லாத நிலையில் அந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel