ADVERTISEMENT

செய்தியாளரை ஒருமையில் பேசி மிரட்டிய சீமான் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

Case registered against Seeman under 3 sections

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளளது.

புதுச்சேரியில் நேற்று (நவம்பர் 23) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது SIR தொடர்பாக கேள்வி கேட்ட கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜீவை, தகாத வார்த்தையில் திட்டினார். ஒருமையில் வாடா.. போடா.. என்று தரம் தாழ்த்தி அநாகரிகமான வார்த்தைகளில் மிரட்டல் தொனியிலும் பேசினார். அவரது கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்து கொலை வெறியோடு கடுமையாக தாக்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

ADVERTISEMENT

இதில் காயமடைந்த ராஜீவை, சக செய்தியாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சீமானின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், கோவை பத்திரிகையாளர் மன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் ராஜீவை தாக்கிய நபர்களை புதுச்சேரி காவல்துறை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்து உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜீவ் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 296 b (தகாத வார்த்தையில் திட்டுதல்), 115(2) (தாக்குதல்), 351(2) (கொலை மிரட்டல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share