அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. Case against Senthil Balaji
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.
இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து 2023 ஆம் ஆண்டு அவரை கைது செய்தது.
ஓராண்டு சட்டப் போராட்டத்திற்கு பின்னர் 2024 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவரால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில், செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையை எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதன்படி கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிலவர அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது விசாரணை நீதிமன்றம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று (மார்ச் 28) விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் சம்மன் அனுப்ப வேண்டும்.
இந்த வழக்கில் எடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை மே 2ஆம் தேதிக்குள் சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை மே 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அதேசமயம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மூன்று வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது.se against Senthil Balaji