இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் அக்சய் குமார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் பிரதான வில்லனாக நடித்துள்ளார்.
தற்போது ‘ஜாலி எல்எல்பி 3’ என்ற இந்திப் படத்தில் அக்சய் குமார் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் நீதித் துறையின் நேர்மைக்கு பங்கம் ஏற்படும் வகையில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கேலி செய்து காட்சிகள் வைத்து இருப்பதாக கூறி படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அஜ்மீர் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரபான்சிங் ரத்தோட் கோர்ட்டில் புகார் மனு கொடுத்துள்ளார்.
எனவே படத்தில் நடித்துள்ள அக்சய்குமார் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
படக்குழுவினருக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
வக்கீல் சந்திரபான் சிங் கூறும்போது, ‘நீதித்துறையின் மாண்பை நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மதிப்பது இல்லை” என்றார்.
இது இந்தி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
10ஆம் வகுப்பில் சதம் : முதலிடத்தில் கணிதம்… கடைசியில் தமிழ்!
MI, PBKS அணிகள் நாக்-அவுட்: பிற அணிகளுக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு என்ன?