கிச்சன் கீர்த்தனா – கேரட் முந்திரி ஸ்மூத்தி!

Published On:

| By admin

பானங்கள் புதுமையானவை மட்டுமல்ல… சத்துக்கும் சுவைக்கும் உத்தரவாதம் அளிப்பவை… குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுபவை… சீனியர் சிட்டிசன்களின் பசி, தாகம் தீர்ப்பவை. கோடையில் ஜில் கொண்டாட்டங்கள் தொடர இந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?

  • முந்திரி – 4 டேபிள்ஸ்பூன்
  • துருவிய கேரட் – 4 டேபிள்ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 3 டேபிள்ஸ்பூன்
  • தண்ணீர் – 2 கப்

எப்படிச் செய்வது?

முந்திரியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்துவிட்டு மற்ற பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். விருப்பப்பட்டால் சாக்கோ துருவல் தூவவும். இந்த ஸ்மூத்தியை மல்ட்டிகிரெய்ன் பிரெஞ்ச் டோஸ்ட் உடன் பரிமாறலாம்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share