சென்னை டூ கொல்கத்தா: தடம் புரண்ட ரயில்!

Published On:

| By Kalai

சென்னையிலிருந்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் விஜயவாடா – விசாகப்பட்டினம் இடையே 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்கத்தா நோக்கி சரக்கு ரயில் ஒன்று இன்று (நவம்பர் 9) அதிகாலை சென்று கொண்டிருந்தது.

ADVERTISEMENT

அதிகாலை 3 மணியளவில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி ரயில் நிலையம் அருகே ஐ.எல்.டி.டி மேம்பாலத்தில் சென்றபோது சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது.

இதனால் விஜயவாடா – விசாகப்பட்டினம் இடையே இன்று ஒன்பது பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.

ADVERTISEMENT

விஜயவாடா – விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் – விஜயவாடா, குண்டூர் – விஜயவாடா, காக்கிநாடா – விஜயவாடா என இன்று இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் இரண்டு ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சரக்கு ரயில்  தடம் புரண்ட ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

கலை.ரா

என் தீர்ப்பு ஒரு விதிவிலக்கு : நீதிபதி பட்

39 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share