சிறுவன் ஓட்டிய கார் விபத்து : தூக்கிவீசப்பட்ட முதியவர் பலி!

Published On:

| By Kavi

சென்னையில் சிறுவன் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் பலியானார். Car accident driven by a boy in chennai

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சாம். இவர் கடந்த 7ஆம் தேதி தனது மகனிடம் கார் சாவியை கொடுத்து  குமரன் நகர் 7ஆவது தெருவில் நிறுத்தியுள்ள கார் மீது கவர் போட்டு வருமாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஆனால் சாவி கையில் கிடைத்த குஷியில் அந்த சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்ற சென்றுள்ளார்.

வடபழனி குமரன் நகர் 5ஆவது குறுக்கு தெரு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் வந்த இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக மோதி நின்றது.

ADVERTISEMENT

இதில் அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அந்த ஆட்டோவில் இருந்தவர் கீழே விழுந்து காயமடைந்தார்.

இந்த விபத்தை தொடர்ந்து அங்கு கூடிய மக்கள் சிறுவனை அடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.  காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

விசாரணையில், காயமடைந்தவர்கள் சாலிகிராமம் தனலட்சுமி காலனி வெங்கடேஸ்வரா தெருவைச் சேர்ந்த மகாலிங்கம்(69), நளன் தெருவைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் கங்காதரன்(49) என்பது தெரியவந்தது.

Car accident driven by a boy in chennai

விபத்தை ஏற்படுத்திய சிறுவன், அவனுடன் சென்ற நண்பர் மற்றும் சிறுவன் கார் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிறுவர்கள் இருவரும் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், சிறுவனின் தந்தை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

இந்தநிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் மகாலிங்கம் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 10) காலை உயிரிழந்தார்.

இந்த வழக்கு முதலில் விபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் மாற்றி பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தந்தை அலட்சியமாக சிறுவன் கையில் சாவி கொடுத்ததால் ஒரு உயிர் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. Car accident driven by a boy in chennai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share