ரசிகர்கள் அதிகம் விரும்பும் ஐபிஎல் தொடரில், தோல்விகளை அதிகம் சந்தித்த கேப்டன்கள் குறித்து நாம் இங்கே பார்க்கலாம்.
டேவிட் வார்னர்
இதில் கடைசி இடத்தில் குறைந்தபட்ச தோல்விகளுடன் டேவிட் வார்னர் இருக்கிறார். அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக 41 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளார்.
கவுதம் கம்பீர்
4-வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் இருக்கிறார். அவர் கேப்டனாக 57 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளார்.
ரோஹித் சர்மா
மும்பை அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா இதில் 3-வது இடத்தினை பிடித்துள்ளார். முன்னாள் கேப்டனான ரோஹித் 67 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார்.
விராட் கோலி
பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி 7௦ தோல்விகளுடன், இந்த பட்டியலில் 2-வது இடத்தினை தக்க வைத்திருக்கிறார்.
மஹேந்திர சிங் தோனி
ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாக திகழும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி 91 தோல்விகளுடன் இந்த பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூர் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃப்ளாஷ்: கிருஷ்ணகிரி… காங்கிரஸிடம் இருந்து பறிக்கிறதா திமுக?