‘ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல் கேப்டன் மில்லர்”: உதயநிதி ஸ்டாலின்

Published On:

| By Monisha

Captain Miller Udhayanidhi Stalin tweet

தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். Captain Miller Udhayanidhi Stalin tweet

சுதந்திர போராட்டக் கதையை சாதிய ஒடுக்குமுறைக்குள்ளிருந்து கதை சொல்லும் பாணியில் வெளிவந்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் மூன்று வகையான தோற்றங்களில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன், சிவராஜ்குமார், போஸ் வெங்கட், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கேப்டன் மில்லர் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இருந்தாலும் சமகால இந்திய அரசியல், சமூக பிரச்சினைகளை அடையாளப்படுத்தும் படமாக உள்ளது.

குறிப்பாக “முன்னாடி அவனுக்கு அடிமையா இருந்தோம், இப்போ வெள்ளக்காரனுக்கு அடிமையா இருக்கோம்.

கோயில் கருவறைக்குள்ள போக விடுவானுங்களா?’

கீழ் சாதி, மேல் சாதி, குடிசை, மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமை தான்.

நம்ம சொல்றத கேக்கணும்னா அதிகாரம் இருக்கணும்” போன்ற மதன் கார்க்கியின் வசனங்கள் சமூகவலைத்தளங்கள், மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்தநிலையில் சூர்யா நடிப்பில் 2021ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியான ஜெய்பீம் படத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டி அறிக்கையொன்றினை வெளியிட்டார்.

அதன் பின் ஜெய்பீம் அனைத்து தரப்பினரின் கவனத்துக்குள்ளாகி மாபெரும்வெற்றியை பெற்றது.

தற்போது நேற்றைய தினம் வெளியான கேப்டன் மில்லர் படம் குறித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தும், பாராட்டுட்டும் கேப்டன் மில்லர் படத்தை அரசியல் முக்கியத்துவமிக்க படமாக மாற்றியுள்ளதுடன், அனைத்து தரப்பினரின் கவனத்திற்குள்ளாக்கியுள்ளது. கேப்டன் மில்லர் படம் பற்றி உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ் குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ்குமார், சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா அருள் மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம் Captain Miller Udhayanidhi Stalin tweet

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெரியார், அம்பேத்கர் விருதுகள்: இன்று வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

மிஷன்: சேப்டர்1 – விமர்சனம்!

கமலின் 237 வது படத்தை இயக்கும் பிரபல ஆக்‌ஷன் டைரக்டர்ஸ்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share