Pre Release Event: தேதி அறிவித்த கேப்டன் மில்லர் படக்குழு!

Published On:

| By christopher

Captain Miller Pre Release

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கேப்டன் மில்லர் படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படம் நல்ல வரவேற்பு பெற்றால் இந்த படத்தின் கேப்டன் மில்லர் 2 & 3 பாகங்கள் வெளியாகும் என்று இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜனவரி 3) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை முன்னிட்டு ஒரு அறிவிப்பு புரோமோ வீடியோவை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கிடையே பொங்கல் விடுமுறையை குறிவைத்து வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

”கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்”: மோடி

நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதை: பாரதிதாசன் பல்கலை விழாவில் முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share