தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் கேப்டன் மில்லர்.
இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
நாளை (ஜனவரி 3) மாலை 6 மணிக்கு கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் மூன்றாவது பாடலான “கோரனாரு” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் தனுஷும் சிவராஜ் குமாரும் இணைந்து நடனம் ஆடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
கேப்டன் மில்லர் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முனி, அரண்மனை வரிசையில் பீட்சா 4
ரூ.120 லட்சம் கோடி… தமிழ்நாட்டுக்கு வரலாறு காணாத நிதி : பிரதமர் பேச்சு!
