ADVERTISEMENT

கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா தேதி இதுவா?

Published On:

| By Monisha

captain miller audio launch

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கேப்டன் மில்லர் படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கேப்டன் மில்லர் படம் நல்ல வரவேற்பு பெற்றால்  கேப்டன் மில்லர் 2 வெளியாகும் என்று இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 3 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ADVERTISEMENT

மேலும் நேற்று (டிசம்பர் 13) நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கேப்டன் மில்லர் பட கெட்டப்பில், பைக்கில் ஸ்டைலாக படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கூடிய விரைவில் கேப்டன் மில்லர் ட்ரெய்லர் வெளியாகும் என்று பதிவிட்டிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

தமிழக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் : உள்ளிருப்பு போராட்டம்

இரண்டு கோடி வேலை என்னாச்சு? மோடிக்கு முன்னால் வண்ணப் புகை வெடிக்கவே வந்தோம்: அதிரவைத்த இளைஞர்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share