ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்த… ‘கேப்டன் அமெரிக்கா’ ஆக்ஷன் இயக்குநர்!

Published On:

| By Manjula

கேப்டன் அமெரிக்கா ஆக்ஷன் இயக்குநர் ஸ்பிரோ ரசாடோஸ் வார் 2 திரைப்படத்தில் இணைந்து உள்ளதாகத், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2௦19-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. குறிப்பாக இதில் ஏஜெண்ட் கபீராக ஹிருத்திக் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தற்போது 4 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் உடன் ஜூனியர் என்டிஆர் இணைந்துள்ளார். இவர்களோடு இணைந்து ஜான் ஆபிரகாம், கியாரா அத்வானி நடித்து வருகின்றனர்.

முதல் பாகத்தை விட இந்த பாகம் மிகுந்த பிரமாண்டமாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் அயன் முகர்ஜி ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

இதற்காக ஹிருத்திக், ஜூனியர் என்டிஆர் இருவரும் தலா 6௦ நாட்கள் கால்ஷீட் அளித்துள்ளனர். இதில் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திற்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் ஸ்பிரோ ரசாடோஸ் இப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேப்டன் அமெரிக்கா தி பர்ஸ்ட் சோல்ஜர், கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படங்களில் இவர் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் உலகப்புகழ் பெற்றவை. இதனால் இவரின் படங்களுக்கு என ஏராளமான ரசிகர்கள் இருகின்றனர்.

தற்போது வார் 2 படத்தில் ரசாடோஸ் இணைந்து இருப்பதால், இப்படத்தின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஸ்பிரோ ரசாடோஸ் அட்லி-ஷாரூக்கானின் ஜவான் படத்தின் சண்டை இயக்குநராக பணியாற்றி இருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஈவிஎம்-ல் வேறு மென்பொருளை ஏற்ற முடியுமா?: முன்னாள் தேர்தல் ஆணையர் பேட்டி!

ஊழியர்களை நீக்கியது கூகுள்… ஏன் தெரியுமா?

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: திருமா வலியுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share