பள்ளி, கல்லூரிகளில் இருந்து திரும்பி வருபவர்களின் டிபன் பாக்ஸை திறந்து பார்க்கும்போது அதில் மிச்சம் இருந்தால் காலையில் எழுந்து அவசரமாக சமைத்து அனுப்புபவர்களின் முகம் வாடிவிடும். நாளைக்கு எதைத்தான் செய்வது என்று யோசிக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த கலர்ஃபுல் கேப்ஸிகம் ரைஸ் செய்து கொடுத்து அனுப்பலாம். மிச்சம் வைக்கலாம் சாப்பிடுவார்கள். அடிக்கடி இதுபோல் செய்ய சொல்வார்கள்.
என்ன தேவை? Capsicum Rice
பாசுமதி அரிசி – 200 கிராம்
குடமிளகாய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று
பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கடுகு, பொட்டுக்கடலை (உடைச்ச கடலை) – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குடமிளகாய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாசுமதி அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் குடமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி, சாதத்துடன் கலந்து… மேலே கொத்தமல்லித்தழை தூவவும்.