ஒரு சிலர் பல மாதங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பார்கள். ஜிம் செல்வார்கள். உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவார்கள். மாதம்தோறும் குறைந்துவந்த எடை, சில மாதங்களுக்குப் பிறகு அப்படியே நின்றுவிடும்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். இதற்கான காரணம் என்ன?
“இப்படி எடை குறையாமல் திடீரென நின்றுபோகிற நிலையில் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்” என்கிறார்கள் ஹெல்த் டயட்டீஷியன்ஸ்.
“முதல் வேலையாக, உங்கள் வொர்க் அவுட்டை கவனியுங்கள். உங்கள் ஃபிட்னெஸ் ஆலோசகருடன் கலந்து பேசி, நீங்கள் செய்கிற உடற்பயிற்சிகள் சரிதானா, ஏதாவது தவறு செய்கிறீர்களா என கேளுங்கள்.
சரியாகச் செய்யும் பட்சத்தில் கூடுதலாக ஏதேனும் பயிற்சிகள் தேவையா அல்லது தற்போது செய்யும் பயிற்சிகளையே இன்னும் கடினமாகச் செய்ய வேண்டுமா என கேளுங்கள்.
அடுத்தது, உணவுப் பழக்கம். தினமும் என்ன, எப்போது, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை ஒரு டைரியில் குறித்து வாருங்கள்.
ஒரு துண்டு கடலை மிட்டாய், இரண்டு பிஸ்கட் என எதைச் சாப்பிட்டாலும் டைரியில் குறிக்கத் தவறாதீர்கள். அதன் மூலம் நீங்கள் சாப்பிடுவதில் ஏதாவது தேவையற்ற உணவுகள் திடீரென சேர்ந்துள்ளனவா என்று தெரியும்.
மூன்றாவது நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் தூக்க சுழற்சி. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்பதை ஒரு ஆப் அல்லது ஸ்மார்ட் வாட்ச் மூலம் குறித்து வாருங்கள். தூக்க நேரத்தில் திடீரென தாறுமாறான மாற்றம் இருக்கிறதா என்பது தெரியும்.
அடுத்ததாக, ரத்தப் பரிசோதனை. தைராய்டு, அனீமியா, வைட்டமின் பி12 குறைபாடு, இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்றவற்றுக்கான ரத்தப் பரிசோதனைகளைச் செய்து பார்ப்பது அவசியம்.
மலச்சிக்கல் பிரச்னையோ, வயிறு தொடர்பான வேறு பிரச்னைகளோ இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று சரிசெய்து கொள்ளுங்கள்.
எடைக்குறைப்பு முயற்சியில் பின்வாங்க வேண்டாம். மேற்குறிப்பிட்டவற்றைக் கண்டறிந்து சரி செய்தாலே, உங்கள் வெயிட்லாஸ் முயற்சி வெற்றி தரும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : தவெக மாநாடு தேதி அறிவிப்பு முதல் வடிவேலு பிறந்தநாள் வரை!
மலையாள படத்துக்கு வழிவிடுமா ‘தி கோட்’?