aகேன்ஸ் திரைப்பட விழா நடுவராக தீபிகா

Published On:

| By admin

தீபிகா படுகோனே 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியில் சர்க்கஸ், பைட்டர், பதான் மற்றும் தெலுங்கில் ப்ராஜெக்ட் கே என பல படங்களில் நடித்து வருகிறார் தீபிகா படுகோனே. அதோடு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

உலகம் முழுமையும் சினிமா பார்வையாளர்களுக்கு அறிமுகமான இந்திய நடிகைகளில் தீபிகா படுகோனே உள்ளார். இந்நிலையில் மே 17 முதல் 28 வரை நடைபெற உள்ள 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் எட்டு நடுவர் குழு உறுப்பினர்களில் தீபிகா படுகோனேவும் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

கேன்ஸ் 2022 ஜூரிக்கு பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் தலைமை தாங்குவார். இவர்கள் தவிர மேலும் 7 பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர்.இந்த விழாவில் ஜூரி உறுப்பினராக இருந்த முதல் இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய். தற்போது இந்தப் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share