அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையப் போகின்றன என்பது இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இதுவரை அதிமுக அணியில் புரட்சி பாரதம் கட்சியும், எஸ்டிபிஐ கட்சியும் அதிகாரபூர்வமாக இருக்கின்றன.
அதேநேரம் இன்று (பிப்ரவரி 6) கோவையில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி, வேலுமணி, சென்னையில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும், ‘அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்’ என்று பேசியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களையும் பகுதி பகுதியாக சந்திக்கிறார். தமிழ்நாட்டை மூன்று பகுதிகளாக பிரித்து மூன்று நாட்களுக்கு சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது ஓவ்வொரு வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட மாசெக்கள், தங்களுடைய எம்பி தொகுதிக்காக உத்தேச வேட்பாளரை அழைத்து வரவேண்டும் என்றும், அந்த வேட்பாளர் தேர்தல் செலவுகளை சமாளிப்பார் என்பதற்கான உத்திரவாதத்தோடு வரவேண்டும் என்று ஒவ்வொரு மாசெவுக்கும் உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் அதிமுகவின் வேட்பாளர் தேர்வைத் தொடங்கிவிட்டார் எடப்பாடி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
பிடிஆர் – அண்ணாமலை : மீண்டும் வார்த்தை போர்!
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ‘ஆட்டமிழக்காமல்’ இருந்த வீரர்கள்!