கனடா கனவா? மாணவர்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’ & ‘பேட் நியூஸ்’… வேலை பார்க்கும் நேரத்தில் பெரிய மாற்றம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

canada student work permit rules 2026 24 hours limit

“அப்பா காசுல படிக்கிறது ஒரு பக்கம்… நாமளே பார்ட் டைம் வேலை பார்த்து ஃபீஸ் கட்டறது தனி கெத்து.” – இந்த மைண்ட் வாய்ஸ் உள்ளவரா நீங்கள்? கனடாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு, அங்கே வேலை பார்ப்பதற்கான விதிமுறைகளில் (Work Rules) பெரிய மாற்றம் வந்துள்ளது. “இனிமே இஷ்டத்துக்கு வேலை பார்க்க முடியாது… ஆனா பழைய ரூல்ஸை விட இது பெட்டர்!” அது என்ன மாற்றம்? இதோ முழு விவரம்.

24 மணி நேரம் மட்டும்தான்! (The 24 Hour Rule)

ADVERTISEMENT

முன்பெல்லாம் வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க அனுமதி இருந்தது. இடையில் கொரோனா நேரத்தில் அது மாற்றப்பட்டது. இப்போது 2026-ஐ ஒட்டி புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

  • புதிய விதி: படிக்கும் காலத்தில் (Academic Session), மாணவர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 24 மணி நேரம் வரை வளாகத்திற்கு வெளியே (Off-campus) வேலை பார்க்கலாம்.
  • ஏன் இந்த மாற்றம்?: “படிக்கப் போனீங்களா? இல்ல சம்பாதிக்கப் போனீங்களா?” என்று கனடா அரசு கேள்வி கேட்காத குறையாக, மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த நேரக் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், பழைய 20 மணி நேரத்தை விட 4 மணி நேரம் கூடுதலாகக் கிடைத்திருப்பது ஒரு வகையில லாபம் தான்!

ஃபுல் டைம் வேலை பார்க்கலாமா?

ADVERTISEMENT

“அப்போ ஃபீஸ் கட்ட காசுக்கு என்ன பண்றது?” என்று பயப்பட வேண்டாம்.

  • விடுமுறை நாட்கள் (Scheduled Breaks): கோடை விடுமுறை (Summer Holidays) அல்லது குளிர்கால விடுமுறை (Winter Break) போன்ற காலண்டரில் உள்ள விடுமுறை நாட்களில், நீங்கள் வரம்பு இல்லாமல் முழு நேரம் (Full-time) வேலை பார்க்கலாம்.
  • இந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் உழைத்து சம்பாதிக்கலாம்.

யாரெல்லாம் வேலை பார்க்கத் தகுதியானவர்?

ADVERTISEMENT

விசா கையில் இருந்தால் மட்டும் போதாது. வேலை பார்க்கச் சில கண்டிஷன்ஸ் இருக்கு:

  • DLI முக்கியம்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் (Designated Learning Institution) முழு நேர மாணவராகப் (Full-time student) படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
  • 6 மாத படிப்பு: உங்கள் படிப்புக்கான காலம் குறைந்தது 6 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • SIN நம்பர்: சோசியல் இன்சூரன்ஸ் நம்பர் (SIN) இல்லாமல் வேலை பார்ப்பது சட்டவிரோதம்.

ரூல்ஸ் தெரியாம ரிஸ்க் எடுத்தா… விசாவுக்கே ஆபத்து!”

  • ‘கேஷ்’ (Cash) வேலை வேண்டாம்: 24 மணி நேரத்துக்கு மேல வேலை பார்த்துட்டு, கையில் ரொக்கமா (Cash in hand) சம்பளம் வாங்கலாம்னு நினைக்காதீங்க. மாட்டிக்கிட்டா ‘டிபோர்ட்’ (Deport) செய்துவிடுவார்கள். கனடா இமிகிரேஷன் இப்போ ரொம்ப ஸ்ட்ரிக்ட்!
  • படிப்பு தான் ஃபர்ஸ்ட்: ஒரு செமஸ்டரில் ஃபெயில் ஆனால் கூட, ஒர்க் பர்மிட் (Work Permit) அல்லது பிந்தைய படிப்பு விசா (PGWP) கிடைப்பதில் சிக்கல் வரும். வேலையை விட படிப்பு முக்கியம்.
  • கோ-ஆப் (Co-op) வாய்ப்பு: உங்கள் படிப்பிலேயே இன்டர்ன்ஷிப் (Co-op) இருந்தால், அதற்கான வேலை நேரம் இந்த 24 மணி நேரக் கணக்கில் வராது. அப்படிப்பட்ட கோர்ஸா பார்த்து எடுங்க.

கனடா போறதுக்கு முன்னாடி, உங்க காலேஜ் DLI லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணிட்டு ஃப்ளைட் ஏறுங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share