கிச்சன் கீர்த்தனா – சம்மர் ஸ்பெஷல் – வாட்டர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

Published On:

| By admin

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெளியில் சென்று வேலை செய்பவர்களுக்கும், பயணத்தில் உள்ளவர்களுக்கும் உடல் வெப்பத்தையும் தாகத்தையும் தணித்துக்கொள்ளத் தண்ணீர் தேவைப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் கடைகளில் விற்கப்படும் வாட்டர் பாட்டில்களை வாங்கி தாகத்தைத் தீர்த்துக்கொள்வோர் பலர். இப்படி கடையில் வாங்கும் குடிநீர் பாட்டில்களை சிலருக்கு கீழே போட மனசு வராது. அந்த பாட்டில்களைத் திரும்பவும் பயன்படுத்தலாமா?

குடிநீர், குளிர்பான பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்திவிட்டு, குப்பைத் தொட்டியில்தான் சேர்க்க வேண்டும். மீண்டும் பயன்படுத்துவது தவறு. இந்த வகை பாட்டில்கள், ‘பாலி எத்திலீன் டெரிப்தலேட்’ என்ற பொருளால் செய்யப்படுபவை. தவிர, ‘பைபினைல்- ஏ’ என்னும் வேதிப்பொருளும் அவற்றில் இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த பாட்டில்களை நீண்ட நாட்கள் வைத்திருந்து தண்ணீர் குடிக்கும்போது, ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு ஏற்படும். உடல் பருமன், டைப் 2 வகை நீரிழிவு போன்ற பல பிரச்சினைகளுக்கு நுழைவு வாயிலாக அமைந்துவிடும். முக்கியமாக இந்த பாட்டில்கள்மீது, நேரடியாகச் சூரிய ஒளி படக்கூடாது.

எல்லா பிளாஸ்டிக் பொருள்களிலும் 1 முதல் 7 வரை ஏதேனும் ஓர் எண் அச்சிடப்பட்டிருக்கும். 1 என்ற எண் இருந்தால் அது ஒருமுறை பயன்படுத்தவே உகந்தது. குடிநீர், குளிர்பான பாட்டில், 1ஆம் நம்பர் வகையைச் சார்ந்தவை. அந்த பாட்டில்களிலேயே ‘திரும்பப் பயன்படுத்தக் கூடாது’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். எனவே பயன்படுத்த வேண்டாம்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share