பியூட்டி டிப்ஸ்: அழகுக்காக ஒரே கண்ணாடியை பல ஆண்டுகள் அணிபவரா நீங்கள்?

Published On:

| By christopher

கண்களில் அணிகிற கண்ணாடியை எல்லோருமே பார்வைக் குறைபாடுகளுக்காக மட்டுமே அணிவதில்லை. இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில், கம்ப்யூட்டர் திரை உமிழும் ஊதா ஒளிக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும் பலர் கண்ணாடி அணிகிறார்கள். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கண்களில் தூசு விழாமலிருக்கவும், சூரிய வெளிச்சத்தால் விழித்திரை பழுதடையாமல் இருக்கவும் கண்ணாடி (Photochromic Glasses) அணிவோர் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர், முக அமைப்புக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதற்காகவே பவர் இல்லாத பிளெயின் கண்ணாடி அணிகிறார்கள். எந்தக் காரணத்துக்காக கண்ணாடி அணிய ஆரம்பித்தாலும், பெரும்பாலும் பலருக்கும் அது வழக்கமாகவே மாறிவிடுகிறது. கண்ணாடி அணியாமல் பார்வை தெரிந்தாலுமே, பலருக்கும் அது இல்லாமல் எந்த வேலையும் ஓடுவதில்லை என்று சொல்வதையும் கேட்கிறோம்.

இந்த நிலையில், “கண்ணாடியோ, கான்டாக்ட் லென்ஸோ அணிவோர், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களைப் பரிசோதித்து பவர் மாறியிருக்கிறதா, வேறு பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப கண்ணாடியையோ, லென்ஸையோ மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால், பலரும் ஒருமுறை பரிசோதித்துவிட்டு அணிய ஆரம்பிக்கும் கண்ணாடியை பல வருடங்களுக்கு அப்படியே தொடர்ந்து அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இன்னும் சிலர், மருத்துவர் எழுதிக்கொடுத்த புதிய கண்ணாடியையும் ஏற்கெனவே உபயோகித்து வந்த பழைய கண்ணாடியையும் மாற்றி மாற்றி அணிவார்கள். இதனால் தலைவலி, கண்வலி, கண் சோர்வு, பார்வை மங்குதல், ஒவ்வாமை, கண்கள் சிவந்துபோவது, கண்களில் கட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். தவறான கண்ணாடியை நீண்ட நேரம் அணிவதால், கண்களின் பவர் அதிகரிக்கலாம். எனவே, கண் மருத்துவரின் பரிந்துரையின்படி சரியான கண்ணாடி அணிவதுதான் பார்வை பிரச்னைகள் தீவிரமாகாமல் காக்கும்” என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : கோதுமை இட்லி

அருந்ததியர் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆ.ராசா கோரிக்கை!

ஸ்டாலின் – திருமா… தனியாக நடந்த சந்திப்பில் நடந்தது இதுதான்!

கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் – அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share