இன்று நாகரிக வளர்ச்சியின் காரணமாக இறுக்கமான ஜீன்ஸ், இறுக்கமான டி-ஷர்ட், அதன் மீது கோட் அணிவது வழக்கமாகிவிட்டது. ஆனால், குளிர் பிரதேசங்களில் அணிய உகந்த இந்த ஆடைகளை வெப்பமான நம் நிலப்பகுதியில் அணிவதன் மூலம் உருவாகும் நோய்கள் குறித்து விழிப்பு உணர்வு நம்மவர்களுக்கு இல்லை. jeans in summer
நம் சீதோஷ்ண நிலைக்குப் பருத்தி ஆடைகளே ஏற்றது. நம் முன்னோர் அதையே உடுத்தினர். பருத்தி ஆடைகள் உடல் வியர்வையை உறிஞ்சிக்கொள்ளும். வெயில் தாக்கும்போது ஈரத்தை வெளியேற்றிவிடும். இதனால் உடலுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது. ஆனால், காற்றுகூட நுழைய முடியாத இறுக்கமான ஆடைகளை நீண்ட நேரம் அணிந்தால் சருமத்தில் சிவந்த நிறக் கொப்புளங்கள், அரிப்பு, எரிச்சல் என அறிகுறிகள் தோன்றக்கூடும்.
மேலும், அடி வயிறு மற்றும் கால் பகுதிகளில் அழுத்திப் பிசையும் இறுக்கமான ஆடைகளை நீண்ட நாட்கள் தொடர்ந்து அணிந்தால் செரிமானமின்மை, உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, தொடைப்பகுதி மரத்துப் போவது, பின்னங்காலில் வலி எடுப்பது போன்ற பிரச்சினைகள் உருவெடுக்கும்.
முக்கியமாக வெயிலின் மூலம் நமக்குக் கிடைக்கும் வைட்டமின் – டி குறைவாகவே கிடைக்கும். இதனால், அக்குள், தொடை இடுக்குகள் போன்ற பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படுவதுடன், கருமை நிறத்தில் படைகளும், கடுமையான அரிப்பும் உண்டாகலாம். குறிப்பாக, ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் உடுத்துவதால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், சினைப்பை நீர்க்கட்டிகள் ஆகியன அதிகரிக்கலாம்.
குளிர்காலத்தில் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதில் தவறேதுமில்லை. ஆனால், கோடைக்காலத்திலும் நாள் முழுக்க அந்த உடையையே உடுத்தினால் பிரச்சினைதான். மேலும், ஆடை பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆடைகளைத் துவைத்தவுடன் வெயிலில் காயவைத்து அணிவது சிறந்தது. எனவே, மூன்று மாதத்துக்கு ஒருமுறை உள்ளாடைகளை மாற்ற வேண்டியது அவசியம்.
இந்த நிலையில் சூழல்… வயது… உடல் அமைப்புக்கேற்ற ஆடைகளை அணியத் தொடங்கினால், ஆடைகளால் உண்டாகும் நோய்களைத் தடுக்கலாம்; ஆரோக்கியமாக வாழலாம் என்று அறிவுறுத்துகிறார்கள் பொதுநல மருத்துவர்கள். jeans in summer