“பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும், அதைத்தான் நாம் சளி பிடித்துக்கொண்டதாக நினைக்கிறோம். அதே நேரம், இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும்” என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
”நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப்புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும்.
சிலருக்கு பெரிய நெல்லிக்காயின் சுவை அவ்வளவாகப் பிடிக்காது என்பதால் வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை நறுக்கிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே போதுமான வைட்டமின் `சி’ கிடைத்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்சினைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு சாப்பிட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வரகரிசி கல்கண்டு பாத்
இது ரொம்ப முக்கியமாக விஷயம் : அப்டேட் குமாரு
லட்டு சர்ச்சை – ஏ.ஆர்.டெய்ரி வழக்கு : கோர்ட்டு உத்தரவு!
ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’ படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!
துபாயில் இன்று தொடங்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை : முழு விவரம்!