சர்க்கரை நோய் வந்துவிட்டால் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்கிற கேள்விகள் நம் மனதில் அடிக்கடி எழும். பொதுவாக கோடையில் இளநீர் குடிப்பது உடலுக்கு நன்மை தருகிறது என்று கூறப்பட்டாலும் சர்க்கரைப் பிரச்சினை உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா என்ற கேள்வி எழுவதும் இயல்புதானே..? Can diabetics drink coconut water?
இந்த நிலையில், “இளநீரில் குளுக்கோஸ் எனும் சர்க்கரைச் சத்தும் பொட்டாசியம், சோடியம் போன்ற நல்ல உப்புச் சத்துகளும் உள்ளன. இதில் இருக்கும் குளுக்கோஸின் அளவு குறைவு. ஒரு முழு இளநீரில் உள்ள குளுக்கோஸ் சத்து ஒரே ஒரு இட்லியில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் சத்தைவிடக் குறைவு. அதனால் அவ்வப்போது எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால், தினமும் வேண்டாம்.
இளநீரை அருந்தும்போது வெறும் நீரை மட்டும் குடிக்காமல் அதன் வழுக்கையையும் சேர்த்து உண்ண வேண்டும். இளநீரில் பொட்டாசியம், சோடியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்துகளும் உள்ளன. இவை கோடையில் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்கும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். Can diabetics drink coconut water?