ஹெல்த் டிப்ஸ்: தேன் நெல்லிக்காய்… சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாமா?

Published On:

| By christopher

தேனுடன் கூடிய நெல்லிக்காய் சிறந்த செரிமானத்திற்கு உதவும் பயனுள்ள சிகிச்சைகளில் ஒன்றாகும். இந்த கலவையானது உணவை சரியாக ஜீரணிக்க சிறந்த இரைப்பை சாற்றை உற்பத்தி செய்கிறது மற்றும் பசியையும் தூண்டுகிறது.

ஆனாலும் எல்லோருக்கும் ஏற்றதா தேன் நெல்லிக்காய்… இனிப்பு சுவை இதில் என்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாமா என்கிற சந்தேகம் பலருக்குண்டு. சித்த மருத்துவர்களின் பதில் என்ன?

“நெல்லிக்காயிலும், தேனிலும் மருத்துவப் பயன்கள் மிக அதிகம். தேன் நெல்லிக்காயில், இரண்டின் மருத்துவ குணங்களும் சேரும்போது, அது இன்னும் ஸ்பெஷல் ஆகிறது. நெல்லிக்காயின் சுவை துவர்ப்பாக இருப்பதால், அதைப் பலரும் விரும்புவதில்லை. அதைத் தவிர்க்க அதோடு தேன் சேர்க்கும்போது, குழந்தைகளும் எடுத்துக் கொள்ளத்தக்க வகையில் அதன் சுவை மாறுகிறது.

எனவே, தேன் நெல்லிக்காய் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளக்கூடிய, அற்புதமான பலன்களைத் தரக் கூடிய ஒன்றுதான். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நீரிழிவு பாதித்தவர்கள் தேன் எடுத்துக் கொள்ளக் கூடாது. நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து எடுப்பதால், அதையும் நீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் முழு நெல்லிக்காயைத் தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் தினசரி ஒரு முழு நெல்லிக்காய் சாப்பிட, ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்படும். அதன் வைட்டமின் சி சத்து காரணமாக நோய் எதிர்ப்பாற்றலும் கூடும்” என்று விளக்கமளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ராகி லட்டு

முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்

சென்னை கடற்கரை – வேளச்சேரி: நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை!

வேல சொல்லியே உசுர வாங்குறாங்க: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share