“ஃபேஸ் வாஷ் என்பதற்கும், பாடி வாஷ் என்பதற்கும் சிறிது வித்தியாசம் இருக்கிறது. ஃபேஸ் வாஷ் கொஞ்சம் மைல்டாக, மென்மையாக இருக்கும். ஏனெனில், முகத்தில் இருக்கும் சருமமே சற்று மிருதுவாகத்தான் இருக்கும். அதுவே நம் உடலில் இருக்கும் சருமம் கொஞ்சம் தடிமனாக இருக்கும். அதில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் வேலை செய்வதால் எண்ணெய் படிந்துவிடும். பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால்தான் உடலுக்குப் பயன்படுத்துவது ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.
எனவே, முகத்துக்கு உபயோகிக்கும் ஃபேஸ் வாஷை உடலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், பாடி வாஷினை முகத்துக்கு உபயோகிக்கக் கூடாது” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
“சிலர் கை நிறைய பாடி வாஷ் எடுத்துக்கொள்வார்கள். அதிக பாடி வாஷ் சேர்ப்பதால் சருமம் வறண்டு போகும். பாடி வாஷும் வீணாகும். பாடி வாஷ் உடலுக்குப் பயன்படுத்தும்போது அரை டீஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் போதும். உடலில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிய பிறகு, பாடி வாஷினைக் கைகளில் தேய்த்து உடலில் நுரை வருகிற அளவுக்கு அப்ளை செய்யலாம். அதன் பிறகு குளித்து விடலாம்.
எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் மட்டும் அரை டீஸ்பூனைவிட கொஞ்சம் கூடுதலாக எடுத்து நுரைவரும் அளவு நன்றாகத் தேய்த்த பிறகு குளிக்கலாம். உங்கள் சருமத்துக்கேற்றதைத் தேர்ந்தெடுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: குஞ்சாலாடு!
டாப் 10 செய்திகள்: புத்தாண்டு கொண்டாட்டம் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் வரை!
நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை… மகளை இழந்த துக்கம் காரணமா?
பாலியல் வன்கொடுமைகளின் வேர்கள் வெகு தொலைவில் இருக்கின்றன!
ஹெல்த் டிப்ஸ்: கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பது எப்படி?