தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் என்பது குறித்த விவாதங்கள் கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்து வருகின்றன. cabinet reshuffle urdu muslim lobby
நேற்று ஏப்ரல் 26 மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில், “அமைச்சர் பதவியை இழக்கும் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் இப்போது வகிக்கும் துறைகளை புதிய அமைச்சர்களுக்குக் கொடுக்கலாம் என முதலில் ஆலோசிக்கப்பட்டது.
இன்னும் தேர்தலுக்கு 9-10 மாதங்களே இருக்கும் நிலையில், அனுபவமில்லாத புதியவர்கள் அமைச்சர்களானால் ஆட்சிக்கு எந்த சங்கடமும் வந்துவிடக் கூடாது. எனவே, இப்போது இருக்கும் அமைச்சர்களுக்கே துறைகளை பகிர்ந்து கொடுத்துவிடலாம் என்பதை நோக்கி முதல்வரின் ஆலோசனை சென்றுகொண்டிருக்கிறது.
அதேநேரம் அடித்தால் லக் என்ற அடிப்படையில்… அமைச்சர் பதவியை பெறுவதற்கும், வளமான துறைகளைப் பெறுவதற்கும் விடா முயற்சியில் இருக்கிறார்கள் திமுக எம்.எல்.ஏ.க்களும், சிட்டிங் அமைச்சர்களும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை வலுப்படுத்தும் வகையில் கடைசி நேரம் அதிர்ஷ்டம் கை கொடுக்குமா என்ற அடிப்படையில் பலரும் அமைச்சரவையில் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
பொன்முடி அமைச்சரவையில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில், விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அடிப்படையிலும், இன்னொரு வகையிலும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்காக சென்னையில் இருக்கக்கூடிய உருது முஸ்லிம் புள்ளிகள் தரப்பினர் சில முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து அவர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது,
“மஸ்தான் ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்டவர். மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு எட்டு மாதங்களில் மீண்டும் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதே போல அமைச்சரவையிலும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

இன்னொரு பக்கம் இப்போது தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இடம் பெற்றிருக்கும் ஆவடி நாசர் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர். உருது முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மஸ்தான் இடம் பெற்றிருந்து பிறகு நீக்கப்பட்டார்.
வேலூர், விழுப்புரம் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உருது முஸ்லிம்கள் கணிசமாக இருக்கிறார்கள். சொல்லப்போனால் துணை முதலமைச்சர் உதயநிதி தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் உருது முஸ்லிம்கள் தான் அதிகம். எனவே உருது முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த மஸ்தானுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற முயற்சியும் நடக்கிறது” என்கிறார்கள்.
ரூம் போட்டு லாபி செய்வாங்களோ? cabinet reshuffle urdu muslim lobby