சென்னை வடபழனியில், இன்று நடைபெற்ற தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்திக்காததால், தமிழகத்துக்கு பல நூறுகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ. 600 கோடி மத்திய அரசு நிதியில், எல்ஈடி பல்புகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் ரூ. 146 கோடி செலவில், எல் ஈ டி பல்புகளுக்கான டெண்டர் விடப்பட்டது. கமிஷனுக்காக இப்படி டெண்டர் விடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரைச் சந்தித்து, திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால், தமிழகத்துக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மிச்சமாகியிருக்கும். தற்போது, தமிழகத்தில் குழப்பம் இல்லாமல் செயல்படும் கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணிதான். திமுக-காங்கிரஸ் கூட்டணியிலும், மக்கள் நலக் கூட்டணியிலும் குழப்பம் நிலவுகிறது. மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவுக்கு, ‘கேமராஃபோபியா’. பத்திரிகையாளர்களைப் பார்த்தால் பயமாக இருப்பதாகக் கூறியுள்ளார். தேமுதிக எங்களுடன் இணையாததால் கோபம் இல்லை. ஆனால், தேமுதிக-வைப் பார்த்து வருத்தப்படுகிறேன். திமுக, அதிமுக-வுக்கு எதிராக உறுதியாகப் பேசிய விஜயகாந்த், எங்களோடு இணைந்திருந்தால் அவரது எதிர்ப்புக்கு அர்த்தம் கிடைத்திருக்கும்’’ என்றார்.
வைகோவுக்கு ‘கேமராஃபோபியா’ – தமிழிசை
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
