யுவன்ஷங்கர் ராஜாவின் YSR புரொடக்ஷன்ஸ், நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. அதற்கடுத்ததாக, சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார். அதற்கான கதை உருவாக்கத்தில் சீனு ராமசாமி இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியானபோது, யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கும் திரைப்படத்தில் அவரது தந்தை இளையராஜா இசையமைக்கிறார் என்றுதான் நினைக்கப்பட்டது. இளையராஜாவும் யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியானது.
நடிகர் விஜய் சேதுபதி ‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் சீனு ராமசாமி – யுவன் கூட்டணியில் இணைய இருக்கிறார்.படத்திற்கு ‘மாமனிதன்’ என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தின் திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.
