ADVERTISEMENT

தொலைக்காட்சி நேயர்களைக் கவரும் மோடி

Published On:

| By Balaji

பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சிகளில் தோன்றும் ஒவ்வொரு முறையும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதாகத் தகவல் அறிக்கை ஒன்று கூறுகிறது.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் இதர தகவல்களை இந்திய ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சிக் குழு (Broadcast Audience Research Council India) பராமரித்து வருகிறது. இந்தக் குழு சேகரித்துள்ள தகவல்களின் படி, தொலைக்காட்சிகளில் பிரதமர் மோடி தோன்றும் ஒவ்வொரு முறையும், அந்நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்வதாகத் தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்கும், மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (Smart India Hackathon) நிகழ்ச்சியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 1.4 மடங்கு உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், பிஎம் மோடி கிரிஷி உன்னதி மேலா (PM Modi Krishi Unnati Mela) நிகழ்ச்சியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 2.3 மடங்கு உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கையில், அப்பகுதிகளைச் சேர்ந்த பிராந்திய செய்தி ஊடகங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதியன்று பெங்களூருவில் நடைபெற்ற பரிவர்த்தன் ராலி (Parivartan Rally) நிகழ்ச்சியைக் கன்னட செய்தி ஊடகங்களில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 418 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தப்பட்ட நிகழ்ச்சியை 1.5 கோடிப் பேர் பார்த்துள்ளனர். இந்த நிகழ்ச்சியால் இந்தி செய்தி ஊடகங்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 240 விழுக்காடும், ஆங்கில செய்தி ஊடகங்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை இருமடங்கும் உயர்ந்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share