வாழ்க்கை ஒரு வட்டம் டா இங்கு ஜெயிக்கிறவன் தோற்பான். தோற்கிறவன் ஜெயிப்பான் என்ற நடிகர் விஜய்யின் வசனத்திற்கு ஏற்ப தற்போது பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் தெறிக்கவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த 2022ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவி தொடரை விட்டே வெளியேறும் நிலையில் இருந்தது.
ஆனால், பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக பிற அணிகளுக்கு இடையேயான போட்டி முடிவுகள் இருந்தது. இதனால், 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை வந்த பாகிஸ்தான், முடிவில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
ஆனால், டி20 2022 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.
பாகிஸ்தான் ரசிகர்கள் அப்போது Bye Bye India என இந்திய அணி வீரர்கள் விமான நிலையத்தில் தங்களது உடமைகளை எடுத்துச் செல்வது போல் ஒரு மீம்ஸை சமூக வலைதளங்களில் போட்டு கலாய்த்து இருந்தனர்.
தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் வெளியேறி இருப்பது அந்த அணி ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்திய ரசிகர்கள் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக மீம்ஸ்-ஐ போட்டு கலாய்த்து வருகின்றனர்.
அதில், Bye Bye Pakistan என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விமான நிலையத்திற்கு செல்வது போல் போஸ்டர் ஒன்று வெளியாகி தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.
இதன்மூலம், 2 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் ரசிகர்கள் செய்த செயலுக்கு தற்போது இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பல முன்னேற்பாடுகளுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியா, அமெரிக்கா போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது முதல் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால், முதல்முறையாக அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பத்தூர்: கார் பார்க்கிங்கில் பதுங்கிய சிறுத்தை பிடிபட்டது!