கோவா மாநிலம் பனாஜிக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் பெப்சிகோ நிறுவனம் தயாரிக்கும் லேஸ் ரக சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். பொதுவாக ஒரு சிப்ஸ் பாக்கெட் 30 கிராம் இருக்க வேண்டும். ஆனால், அந்த இளைஞர் வாங்கிய பாக்கெட்டில் வெறும் 4 சிப்ஸ்களே இருந்துள்ளன.
இதையடுத்து, ரெடிட் தளத்தில் தனது வேதனையை பதிவிட்ட இளைஞர், கோவாவில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பசி காரணமாக தான் 10 ரூபாய் கொடுத்து லேஸ் சிப்ஸ் பாக்கெட் வாங்கிய போது, தனக்கு இந்த அனுபவம் கிடைத்ததாக பதிவிட்டார்.
அதாவது, 30 கிராமுக்கு பதிலாக 8 கிராம் மட்டுமே அந்த பாக்கெட் இருந்துள்ளது. உடனடியாக, அந்த பதிவு வைரலானது. பலரும் லேஸ் தயாரிக்கும் பெப்சிகோ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு போட அறிவுறுத்தினர். சிலர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அப்போது, அந்த பதிவில் பகிர்ந்திருந்தனர். பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களை காற்றடித்த பாக்கெட்டை வைத்து லேஸ் நிறுவனம் ஏமாற்றி வருவதாக குமுறி இருந்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதாவது, 90 நாள்களுக்குள் பெப்சிகோ நிறுவனம் வாடிக்கையாளர் நல நிதியில் 50 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும், வாடிக்கையாளரின் உணர்வுகளை மதிக்காமல் செயல்பட்டதாக வழக்கு தொடர்ந்த இளைஞருக்கு 5 ஆயிரம் இழப்பீடும், நீதிமன்ற செலவாக 2 ஆயிரம் என மொத்தம் 7 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, லேஸ் மட்டுமல்லாமல் பல சிப்ஸ் நிறுவனங்களின் பாக்கெட்டுகளுமே காத்தடித்த பலூன்கள் போலத்தான் இருக்கின்றனர். பாக்கெட்டை உடைத்தால் சிப்ஸ் அளவு வெகு குறைவாகவே இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் புலம்புவதை காண முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
செந்தில் பாலாஜி வழக்கு : ஆளுநருக்கு அனுப்பிய கோப்பை சமர்ப்பிக்க உத்தரவு!
அதிருப்தியில் அமித்ஷா … நடிகர் சுரேஷ் கோபியின் அமைச்சர் பதவி பறிப்பு?