பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று (ஜூன் 14) தொடர்ந்து எட்டாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது. எனவே, பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று சாமானிய மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த மார்ச் 13ஆம் தேதி, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியது மத்திய அரசு. இதுதவிர, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சாலை வரியும் ரூ.1 உயர்த்தப்பட்டது. இந்த வரி உயர்வால் அரசின் வருவாயில் ஆண்டுக்கு ரூ.39,000 கோடி அதிகரிக்கும் எனவும், இந்த விலை உயர்வு மக்களை பாதிக்காது என்றும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஆனால் கலால் வரி உயர்வைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 62 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 64 பைசாவும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 8 நாட்களில், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 4.52 ரூபாயும், டீசல் ஒரு லிட்டருக்கு 4.64 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
**பெட்ரோல் டீசல் இன்றைய விலை பட்டியல்**
டெல்லி: பெட்ரோல் ரூ. 75.78 டீசல் ரூ. 74.03
குர்கான்: பெட்ரோல் ரூ.74.68. டீசல் ரூ.66.92
மும்பை: பெட்ரோல்ரூ. 82.70. டீசல் ரூ. 72.64
சென்னை: பெட்ரோல்ரூ. 79.53. டீசல் ரூ. 72.18
ஹைதராபாத்: பெட்ரோல்ரூ.78.67. டீசல் ரூ. 72.36
பெங்களூரு: பெட்ரோல்ரூ. 78.23. டீசல் ரூ. 70.39
**-கவிபிரியா**�,